Thursday, September 26, 2013

பெண்களை வசை பாடும் ஆண்களே facebook girls kavithai

பெண்களை வசை பாடும் ஆண்களே
by (singaikaarmugilan)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi )
பெண்களை வசை பாடும் ஆண்களே 

ஒரு பெண் அதிகாலையில் 
சேவல் கூவலுக்கு முன்னே எழுந்து 
முற்றத்தில் சாணம் தெளித்து 
அரிசி மாவால் கோலம் பதித்து 
வீட்டை பெருக்கி சுத்தம் செய்து 

இன்னும் ஒரு கணம் கூட அமரவே இல்லாமல் 

காலை வேளைக்கு சிற்றுண்டி செய்து 
குழந்தைகளை குளிப்பாட்டி 
குழந்தைகளை பள்ளிக்கு 
அனுப்பி வைத்து 
கணவனை உபசரித்து ,
பணிக்கு அனுப்பி வைத்து 
வீட்டு  வேலைகளை 
இழுத்துபோட்டு செய்து 

இன்னும் ஒரு கணம் கூட அமரவே இல்லாமல்

 நாடு நடப்புகளை சற்று தெரிந்து கொள்ளலாம் 
என்று நினைத்து தொலைகாட்சியை 
சற்று போடலாம் என்று நினைகையில்
 நனைத்து வைத்த துணிமணிகள் 
நினைவில் வந்து பாரமாய் அழுத்த 

எழுந்து ஓடி வா எனை
துவைத்து காய போடு என  
நனைத்து வைத்த துணி
 எனை மிரட்ட துணிமணிகளின் 
அழுக்கை துவைத்து காய போட்டு 

இன்னும் சற்று நேரம் கூட அமரவேயில்லை 

அடுத்து மத்தியான நேரத்துக்கு சமையல் செய்து 
பள்ளிமுடித்து வீடு வரும் பிள்ளைகளை கவனித்து 
உணவளித்து ,உட்கார வைத்து ,
வீட்டு பாடத்தை எழுத வைத்து
 
இன்னும் சற்று நேரம் கூட அமரவே இல்லை 

அடுத்து இரவு நேர சிற்றுண்டி செய்து 
உறவுக்கு போன் செய்து 
நலம் விசாரித்து 
குழந்தைகளை சாப்பிட வைத்து 
கணவனுக்கு சாப்பாடு பரிமாறி 
இல்லறம் பரிமாறி நான் தூங்கும் நேரம் 
இரவு பதினொன்று பன்னிரண்டு ஆகிவிடும் .

மீண்டும் மறுநாள் அதிகாலை
 சேவல் கூவலுக்கு முன்பே எழுந்து 
தொடரும் எனது அன்றாட பணிகள் 

இருந்தும் பல ஆண்கள் 
இந்த பெண்கள் படும் பாட்டை 
சட்டை செய்து கொள்வதே இல்லை 
அறிந்து கொள்வதும் இல்லை 
தெரிந்து கொள்வதும் இல்லை 

பெண்களை வசை பாடும் ஆண்களே !
சற்று சிந்தியுங்கள் ,
நீங்கள் பெண்கள் இடத்தில் இருந்தால் ?
உங்களின் நிலை ?
இருந்து பாருங்கள் 
அப்பொழுது புரியும்.

******************தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts