Friday, December 13, 2013

Tamil Nadu facebook News

Amir Hussain
வேதனையின் உச்சக்கட்டம்.....!!
Tamil Nadu facebook News

இந்த வருடம் இவ்வளவு பெட்ரோல் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.

இந்த வருடம் இவ்வளவு வாகனங்கள் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.

இந்த வருடம் இவ்வளவு தங்கம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.

இந்த வருடம் இவ்வளவு சாராயம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.

இது பதிவு சிரிப்பதற்காக அல்ல... வேதனையின் உச்சக்கட்டம்

நன்றி : கனி
Tamil Nadu facebook News

குட்டித் தூக்கம் kutti thookkam in office

குட்டித் தூக்கம் kutti thookkam in office

அலுவலகத்தில் குட்டித் தூக்கம் போட்டால் சூப்பர் ஐடியா கிடைக்கும் என்று ஹப் ஸ்பாட் என்ற மென்பொருள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் ஹாலிகன் கூறியுள்ளார்.

நியுயார்க் டைம்ஸ் இதழுக்கு இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பொதுவாக நான் சாதாரணமான வேலைகளைத் தான் செய்வேன். ஆனால் மாதத்தில் இருமுறையாவது அருமையான ஐடியாக்கள் எனக்கு உதிக்கும்.
நான் தூங்கப் போகும்போதும், தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதும், சனிக்கிழமை அதிகாலை நடைபயிற்சியின் போதும் அருமையான நல்ல ஐடியாக்கள் வருகிறது.

இது தொடர்ந்து நடக்கிறது.என்னைப் போலவே என் ஊழியர்களும் புதுப்புது ஐடியாக்களை சொல்ல வேண்டும் என விரும்பினேன்.

இதனால் அவர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர்களை அவ்வப்போது குட்டித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறேன் என்றும் இப்படி தூங்குவதால் அவர்களுக்கும் அருமையான ஐடியாக்கள் வருகின்றன எனவும் கூறியுள்ளார்.


Popular Posts

Popular Posts