From தமிழால் இணைவோம் on Facebook
தமிழர்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி! எச்.டி.எப்.சி வங்கி தமிழில் படிவங்களை வெளியிட்டது!
சில மாதங்களுக்கு முன் எச்.டி.எப்.சி வங்கி தமிழில் பணம் செலுத்தும் படிவங்களை வழங்கவில்லை என்று பதிவு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் நாம் வங்கியில் தமிழில் படிவங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தோம். முகநூலில் இது குறித்து பதிவு செய்து குறிப்பிட்ட இந்த வங்கியின் மேலாளர் அலைபேசி எண் கொடுத்து முகநூல் நண்பர்களை புகார் கொடுக்க கேட்டுக்கொண்டோம். அதை தொடர்ந்து பல நூறு தமிழர்கள் வங்கியில் தொடர்பு கொண்டு இதே கோரிக்கையை முன்வைத்தனர். நம் எல்லோரின் கோரிக்கையை ஏற்று இப்போது வங்கி நிர்வாகம் மும்மொழியில் பணம் செலுத்தும் படிவத்தை வெளியிட்டுள்ளது. இனிமேல் இதே படிவங்கள் தான் வங்கியில் வழங்கப்படும் .
இன்று வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து , நன்றி கூறினேன். அவரும் நம் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இனி ஒவ்வொரு இடத்திலும் தமிழை கொண்டு வருவோம். எங்கெல்லாம் நம் மொழி உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் குரல் கொடுப்போம். மொழி காத்து இனம் காப்போம். வாழ்க தமிழ்!
- ராஜ்குமார் பழனிச்சாமி
No comments:
Post a Comment